கொரோனா பீதி: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு

சென்னை

கொரோனாவிற்கு சர்வதேச நாடுகள்  பயந்து நடுங்கி நிற்கின்றன. 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள  கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி  10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.  சட்டசபையில் தமிமுன் அன்சாரி  கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை
எடுக்கப்ப்டுகிறது. 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

 

 

News Source By Daily Thanthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *