சென்னையில் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை

சென்னை,

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளுக்கு செல்ல இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மக்களுக்கு அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடற்கரைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

 

News Source By Daily Thanthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *