கொரோனா பாதிப்பு: இரண்டரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!

லண்டன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  பாதிக்கப்பட்ட நாடுகள் எடுத்து வருகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக, சுமார் 53 லட்சத்தில் இருந்து  இரண்டரை கோடி பேர் வரை வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழியர்கள் அமைப்பு (ஐஎல்ஓ)கூறியுள்ளது.இவற்றில் 74 லட்சம் பேர் உயர் வருமானம் பெறும் நாடுகளில் இருப்பர்.

தொழிலாளர் சந்தையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து ஐஎல்ஓ தனது குறிப்பில் சுட்டிக்காட்டி உள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சீனாவில் தொழில்துறை நிறுவனங்களின் மொத்த மதிப்பு 13.5 சதவீதம்  குறைந்துள்ளது.

பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைவதால் வருமானத்தில் ஏற்படும் சிரமம் வறுமைக் கோட்டிற்கு அருகில் அல்லது அதற்குக் கீழே உள்ள தொழிலாளர்களை பேரழிவிற்கு உட்படுத்தும். 2020 ஆம் ஆண்டிற்கான கொரோனா வைரஸுக்கு முந்தைய மதிப்பீட்டை விட உலகெங்கிலும் 3. 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருக்கக்கூடும் என்று அது கணக்கிட்டு உள்ளது.

அதிகரித்த வேலையின்மையின் விளைவாக தொழிலாளர்கள் மொத்தமாக 860 பில்லியன் டாலர் முதல் 3.4 டிரில்லியன் டாலர் வரை உழைப்பை இழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறி உள்ளது

கொரோனா வைரஸ் பரவல்  இனி உலகளாவிய சுகாதார நெருக்கடி அல்ல, இது ஒரு சிறந்த தொழிலாளர் சந்தை மற்றும் பொருளாதார நெருக்கடி என , ஐஎல்ஓ தலைமை நிர்வாக அதிகாரி  கை ரைடர் கூறி உள்ளார்.

 

 

 

News Source By Daily Thanthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *